அமெரிக்காவின் பைடென் அரசு யுகிரேனின் சனாதிபதி செலென்ஸ்கியை (Zelenskiy) நிபந்தனைகள் எதுவும் இன்றி ரஷ்ய சனாதிபதி பூட்டினுடன் பேச்சுவார்த்தை நிகழ்த்த விரும்புவதாக தெரியப்படுத்துமாறு மறைவில் அழுத்துகிறது என்று அமெரிக்காவின் The Washington Post பத்திரிகை கூறியுள்ளது.
அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகள் யுகிரேனுக்கு தொடர்ந்தும் உதவ தீர்மானம் கொண்டிருந்தாலும், மேற்கு நாடுகளும் யுகிறேன் யுத்தத்தால் பெருமளவு பாதிப்பு அடைகின்றன. மேற்கின் பணமும் வேகமாக கரைந்து, கையிருப்பில் உள்ள ஆயுதங்களும் குறைந்து வருகிறது.
பூட்டின் தற்போது பேச்சுவார்த்தைக்கு தயார் இல்லை என்று யுகிறேன் கருத்துடன் அமெரிக்கா உடன்படாலும், செலென்ஸ்கி பேச்சுவார்த்தைக்கு தயார் என்ற கருத்தை முன்வைக்க வேண்டும் என்று அமெரிக்கா அழுத்துகிறது.
குறிப்பாக செலென்ஸ்கி தான் கொண்டுள்ள பூட்டினுடன் பேசமாட்டேன், ஆக்கிரமித்து உள்ள ரஷ்ய படைகள் வெளியேறும்வரை பேசமாட்டேன் போன்ற நிபந்தனைகளை கைவிடுமாறு அமெரிக்கா மறைவில் அழுத்துகிறது.
இதையே பூட்டினும் எதிர்பார்த்தார். யுத்தம் நீடித்தால் மேற்கு மெல்ல சலித்துக்கொள்ளும் என்பதை பூட்டின் எதிர்பார்த்தார்.