செலன்ஸ்கிக்கு ஆதரவாக திரளும் ஐரோப்பா

செலன்ஸ்கிக்கு ஆதரவாக திரளும் ஐரோப்பா

வெள்ளை மாளிகையில் ரம்புடனும், உதவி சனாதிபதி வான்சுடனும் முரண்பாடு விரட்டப்பட்ட யூக்கிறேன் சனாதிபதி செலன்ஸ்கிக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் திரண்டுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை லண்டன் நகரில் இடம்பெற்ற அமர்வு ஒன்றில் பிரித்தானிய பிரதமர் யூக்கிறேனுக்கு உதவ அனைத்து நாடுகளையும் கேட்டுள்ளார். பிரித்தானியாவும், பிரான்சும், வேறு சில நாடுகளும் தமது தரப்பில் யூக்கிறேன் யுத்த நிறுத்த தீர்வு ஒன்றை முன்வைக்க உள்ளதாகவும் பிரித்தானிய பிரதமர் கூறியுள்ளார்.

ஆனாலும் பொருளாதார, ஆயுத, அரசியல் ஆளுமை கொண்ட அமெரிக்காவின் ஆதரவு இன்றி ஐரோப்பா மட்டும் பெரிய அளவில் எதையும் நடைமுறை செய்ய முடியாது.

சனிக்கிழமை பிரித்தானியா $2.8 பில்லியன் கடனை யூகிறேனுக்கு வழங்க இணங்கியுள்ளது. இந்த பணத்தில் யூக்கிறேன் யுத்த விமானங்களை தயாரிக்கும் என்று செலன்ஸ்கி கூறியுள்ளார்.

அத்துடன் பிரித்தானியாவின் $2 பில்லியன் கடனுக்கு யூக்கிறேன் பிரித்தானியாவில் தயாரிக்கப்படும் 5,000 வான் பாதுகாப்பு (air defense) ஏவுகணைகளையும் கொள்வனவு செய்யலாம் என்று பிரித்தானிய பிரதமர் கூறியுள்ளார்.