நியூசிலாந்தில் இருந்து சீனாவுக்கு 5,687 மாடுகளை ஏற்றி சென்ற Gulf Livestock 1 என்ற கப்பல் அப்பகுதியில் நகரும் Maysak என்ற சூறாவளிக்குள் அகப்பட்டு தொலைந்து உள்ளது. இந்த கப்பலில் மொத்தம் 43 பணியாளர் இருந்துள்ளனர். அவர்களில் 39 பேர் பிலிப்பீன் நாட்டினர், 2 பேர் நியூசிலாந்து நாட்டினர், ஒருவர் அஸ்ரேலியர், இன்னொருவர் சிங்கப்பூர் வாசி.
தற்போது ஒருவர் மட்டும் ஜப்பானிய படைகளால் மீட்கப்பட்டு உள்ளார். அவர் பிலிப்பீன் நாட்டவர். இவர் மிதக்கும் கவசத்தை அணிந்து இருந்துள்ளார். ஏனையோரை தேடும் பணியில் பல நாடுகள் ஈடுபட்டு உள்ளன.
ஜப்பானின் தென்கிழக்கில் உள்ள Amami Oshima என்ற தீவுக்கு அருகில் விபத்துக்கு உள்ளான இந்த கப்பல் 139 மீட்டர் (நீளம் 456 அடி) கொண்டது. இது ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி தனது 17 நாள் பயணத்தை ஆரம்பித்து இருந்தது.
விபத்தின்பொழுது இந்த கப்பல் ஆபாயக்குரல் விடுத்து இருந்தது என்கிறது ஜப்பான்.
சூறாவளி Maysak வியாழன் காலை தென்கொரியாவை அடைந்து உள்ளது.