சுவிஸ் வங்கியாளருக்கு $55,000 தண்டம், 1MDB ஊழல் காரணம்

Coutts & Co. என்ற சுவிஸ் வங்கியின் முன்னாள் வங்கியாளர் ஒருவருக்கு இன்று வெள்ளி Swiss Federal Criminal Court $55,000 (50,000 Swiss francs) தண்டம் விதித்துள்ளது. இவரை அடையாளம் காட்டாது, பதிலுக்கு ‘A’ என்று அடையாளம் இடப்பட்டு உள்ளது.

மலேசியாவின் 1MDB வங்கி கணக்கில் இருந்து Jho Low என்பவர் கட்டுபாட்டில் உள்ள தனியார் வங்கி கணக்கு ஒன்றுக்கு களவாக $700 மில்லியன் நகர்த்தப்பட்டதை அறிந்திருந்தும் அதை உரியவர்களுக்கு அறிவிக்காமல் இருந்தமையை ‘A” செய்த குற்றமாகும். களவு நடைபெறுகிறது என்று தெரிந்தும் அவற்றை ‘A’ அதிகாரிகளுக்கு தெரிவிக்கவில்லை என்கிறது நீதிமன்றம்.

2009 ஆம் ஆண்டில் சுவிசில் உள்ள Coutts தலைமையகத்துக்கு விடுத்த வேண்டுகோளின்படி Jho Low தனது கொடுக்கல், வாங்கல்களை சிங்கப்பூரின் Coutts கிளைக்கு அறிவிக்காது நேரடியாக தனது chairman.goodstar@gmail.com என்ற ஈமெயிலுக்கு அனுப்பும்படி கூறியுள்ளார். இதற்கு Coutts வங்கியாளரான ‘A’ உடந்தையாக இருந்துள்ளார்.

இந்த ஊழல் தொடர்பாக முன்னாள் பிரதமர் Najib ஏற்கனவே சிறைத்தண்டனை பெற்றுள்ளார்.

Jho Low என்பவர், ஒரு Seychelles என்ற இடத்தில் பதியப்பட்ட Good Star என்ற நிறுவனம் மூலம், $8 பில்லியன் முதலீட்டு திட்டங்களுக்கு பணம் திரட்டி, பின் விலை உயர்ந்த sports கார், வீடுகள், ஓவியங்கள் என்பவற்றை கொள்வனவு செய்திருந்தார். அவர் தற்போது சீனாவின் Macau நகரில் ஒளிந்து வாழ்கிறார்.

1692 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்ட Coutts தற்போது உலகின் 8 ஆவது பழைய வங்கியாகும். இது பலதடவைகள் வேறு வங்கிகளால் கொள்வனவு செய்யப்படும், கைமாறியும் இருந்தது.