நவம்பர் 25 ஆம் திகதி அடையாளம் காணப்படாதோரால் கடத்தி இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரக தவுகளை பறித்ததாக கூறப்படும் சம்பவத்தின் காரணியான சுவிஸ் தூதரக ஊழியர் இலங்கையை விட்டு வெளியேற இலங்கை நீதிமன்றம் இன்று செவ்வாய் தடை விதித்துள்ளது.
.
இந்த தடை டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும். இக்காலத்தில் மேற்படி ஊழியர் கடத்தல் தொடர்பாக தனது முறைப்பாடுகளை இலங்கை பொலிஸாருக்கு வழங்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
.
கோத்தபாய ராஜபக்ஸ சனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டபின் இலங்கை CID யின் முன்னனி விசாரணியாளர் Nishantha Silve சுவிஸ்சுக்கு நகர்ந்துள்ளார். இவர் கடந்த அரசு காலத்தில் மகிந்த ராஜபக்ஸ காலத்து சம்பவங்களை விசாரித்து வந்தவர்.
.
சுவிஸ் அரச செயலாளர் Pascale Baeriswly இலங்கை தூதுவரான Karunasena Hettiarachchi யை அழைத்து மேற்படி சம்பவம் தொடர்பாக உரையாடி உள்ளார்.
.