யூக்கிறேனுள் நுழைந்து யூக்கிறேன்-ரஷ்ய யுத்தத்தை ஆரம்பித்த ரஷ்யா இன்றி இந்த யுத்தத்தின் சமாதான மாநாடு ஒன்று சுவிட்சலாந்தில் ஜூன் 15ம், 16ம் திகதிகளில் இடம்பெறுகிறது.
வழமைபோலவே இந்த மாநாட்டில் மேற்கு நாடுகளும் மேற்கு சார்ந்த நாடுகளும் பங்கு கொள்கின்றன. ரஷ்யா இன்றி மாநாட்டில் அர்த்தமில்லை என்று கூறி சீனா பங்கு கொள்ளவில்லை. இந்தியா இதுவரை தனது முடிவை .அறிவிக்கவில்லை.
சுமார் 160 நாடுகளுக்கு அழைப்பு விடுத்திருந்தாலும் சுமார் 90 நாடுகளே பங்குகொள்ளும். கனடா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி, போலந்து, ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்களும், அமெரிக்காவின் உதவி சனாதிபதியும் பங்கு கொள்கிறார்கள்.
யூக்கிறேன் சமாதானத்துக்கு நிபந்தனையாக ரஷ்யா உடனடியாக கிரைமியா உட்பட அனைத்து ஆக்கிரமித்துள்ள இடங்களில் இருந்து வெளியேற வேண்டும் என்றுள்ளது. ஆனால் அது நடைமுறைக்கு சாத்தியமானது அல்ல.