சுமார் 8% மரக்கூழ் கொண்ட அமெரிக்க Parmesan cheese

Cheese

அமெரிக்காவில் தயாரிக்கப்படும் Parmesan என்ற cheese வகையில் சுமார் 8% மரக்கூழ் என்ற உண்மை வெளியாகியுள்ளது. அத்துடன் இவ்வாறு cheese மரக்கூழை கொண்டிருப்பது அமெரிக்க அரசால் அனுமதிக்கப்பட்ட முறைமையே. பொதுவாக 1% முதல் 2% வரையான பங்கே மரக்கூழ் ஆக இருப்பது அனுமதிக்கப்பட்டு இருந்தாலும் சில அமெரிக்க Parmesan cheese தயாரிப்புகள் 8% வரை மரக்கூழாக உள்ளதாம்.
.
Parmesan cheese திரண்டு கட்டியாகாமல் இருப்பதற்காகவே இவ்வாறு மரக்கூழ் சேர்க்கப்படுகிறது. உண்மையில் இது நன்கு அரைக்கப்பட்டு cellulose ஆகவே சேர்க்கப்படுகிறது. அந்தவகையில் இந்த மரக்கூழ், தண்டுவகை மரக்கறியை உட்கொள்வதை ஒத்தது. அமெரிக்காவின் சட்டப்படி விற்பனை செய்யப்படும் உணவு பொருள் ஒன்றில் cellulose இருப்பதை அட்டையில் உள்ள ‘உள்ளடக்கம்’ தெரிவிக்க தேவையில்லை என்பதால் மரக்கூழ் இருப்பதை அமெரிக்க Parmesan cheese கட்டிகள் நுகர்வோருக்கு தெரிவிப்பது இல்லை..
.
அசல் Parmesan cheese இத்தாலியிலேயே தயாரிக்கப்படுகிறது. இத்தாலியில் தயாரிக்கப்படும் Parmesan cheese 100% தூய Parmesan cheese ஆகும், மரக்கூழ் எதுவும் இல்லை.
.

Parmesan cheese என்ற சொல் தமக்கு உரியது என்றும், அமெரிக்காவின் கலப்பட Parmesan cheese தமது தயாரிப்பை மாசு செய்கிறது என்றும் இத்தாலி அமெரிக்க தயாரிப்பாளர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. இதனால் அமெரிக்காவில் தயாரிக்கப்படும் Parmesan cheese இனிமேல் ‘அமெரிக்காவில் செய்யப்பட்ட’ Parmesan cheese என்று குறிப்பை கொண்டிருக்குமாம்.
.