சுமார் 150 திமிங்கிலங்கள் கரையொதிங்கி மரணம்

whales

ஆஸ்ரேலியாவின் Perth நகருக்கு 315 km தெற்கே உள்ள Hamelin Bay என்ற கடற்கரையில் 150க்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள் (short-fined pilot whales) கரையொதிங்கி இருந்தன. தாமாக மீண்டும் கடலுள் புகமுடியாமையால் இவற்றுள் பெரும்பாலானவை தற்போது மரணித்துள்ளன.
.
பொதுமக்கள் அங்கு செல்லமுன்னரே பெரும்பாலான திமிங்கிலங்கள் மரணித்திருந்தன. அங்கு திரண்ட மக்கள் 5 திமிங்கிலங்களை மட்டுமே தள்ளி மீண்டும் கடலுள் விட்டனர்.
.
இவ்வாறு திமிங்கிலங்கள் கரையொதிங்கி இருப்பதை முதலில் சில மீனவர் வெள்ளிக்கிழமை கண்டுள்ளனர். இவர்கள் உடனடியாக உள்ளூர் அதிகாரிகளுக்கு விடயத்தை அறிவித்து உள்ளனர்.
.
2009 ஆம் ஆண்டில் மேலும் 80 திமிங்கிலங்கள் இந்த பகுதியில் கரை ஒதுங்கி மரணித்து இருந்தன.
.
Short-fined pilot திமிங்கிலங்கள் சுமார் 5 மீட்டர் நீளத்தையும், 3 தொன் பாரத்தையும் கொண்டவை. பொதுவாக சுமார் 100 இவ்வகை திமிங்கிலங்கள் கூட்டமாக திரியும்.
.

திமிங்கிலங்கள் ஏன் இவ்வாறு கூட்டமாக கரை ஓதுங்குகின்றன என்பதை இதுவரை விஞ்ஞானம் அறியவில்லை.
.