பிரித்தானியாவில் நேற்று நடைபெற்ற பொது தேர்தலில் பிரதமர் சுனக்கின் Conservative கட்சி 121 ஆசனங்களை மட்டும் பெற்று தோல்வி அடைய Labor கட்சி 412 ஆசனங்களை பெற்று பெரும்பான்மை ஆட்சியை கைப்பற்றியுள்ளது. பெரும்பான்மை ஆட்சிக்கு 326 ஆசனங்கள் மட்டுமே தேவை.
Conservative கட்சி கைவசம் இருந்த ஆசனங்களில் 250 ஆசனங்களை இழந்துள்ளது. அதேநேரம் Labor கட்சி மேலதிகமாக 211 ஆசனங்களை வென்றுள்ளது.
ஆசன எண்ணிக்கையில் Labor பெருவெற்றி அடைத்தாலும், 1.6% மேலதிக வாக்குகளை மட்டுமே அது இம்முறை பெற்றுள்ளது. அதேவேளை Conservative 19.9% வாக்குகளை இழந்துள்ளது. Reform UK என்ற கட்சி 14.3% மேலதிக வாக்குகளையும், Green கட்சி 4.1% மேலதிக வாக்குகளையும் பெற்றுள்ளன.
Labor பெற்ற 1.6% மேலதிக வாக்குகள் 104.9% ஆசன அதிகரிப்புக்கு காரணமாகவில்லை. பதிலாக வலதுசாரி வாக்குகள் உடைந்து தம்முள் சிதற Labor தனது வழமையான வாக்குகளுடன் பெரும்பான்மை அரசை அமைகிறது. இவ்வகை வாக்குடைப்பு அல்லது வாக்கு உடைதல் சனநாயகத்தில் உள்ள குறைபாடுகளில் ஒன்று.