ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுள் இறக்குமதி செய்யப்படும் சீன EV களுக்கு (electric vehicles) 25% மேலதிக இறக்குமதி வரியை அறவிட அங்கத்துவ நாடுகளால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ், இத்தாலி, போலந்து உட்பட 10 நாடுகள் மேலதிக வரிக்கு ஆதரவாக வாக்களிக்க, ஜெர்மனி, ஹங்கேரி உட்பட 5 நாடுகள் மேலதிக வரிக்கு எதிராக வாக்களித்து உள்ளன. ஸ்பெயின், பெல்ஜியம், ஸ்வீடன், போர்த்துக்கல் உட்பட 12 நாடுகள் வாக்களியாது இருந்துள்ளன.
மேற்படி மேலதிக வரிக்கு 10 நாடுகள் மட்டுமே ஆதரவு வழங்க, 12 நாடுகள் அதை எதிர்த்தமை அல்லது ஆதரவு வழங்காது ஒதுங்கியமை மேற்படி விசயத்தில் ஐரோப்பிய நாடுகள் இணைக்கப்பாட்டை கொண்டிருக்கவில்லை என்பதை காட்டுகிறது.
பதிலுக்கு சீனா ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மேலதிக வரி அறவுடவுள்ளது.