சீன DeepSeek  நிறுவனத்தால் NVIDIA $593 பில்லியன் இழப்பு

சீன DeepSeek  நிறுவனத்தால் NVIDIA $593 பில்லியன் இழப்பு

சீனாவை தளமாக கொண்ட DeepSeek என்ற AI நிறுவனத்தின் வருகையால் அமெரிக்காவை தளமாக கொண்ட INVIDIA என்ற முதல் தர AI நிறுவனம் திங்கள்கிழமை பங்கு சந்தையில் $592.7 பில்லியன் பெறுமதியை இழந்துள்ளது.

அதனால் NVIDIA வின் பங்கு சந்தை பெறுமதி திங்கள் மட்டும் 17% ஆல் விழுந்துள்ளது.

கடந்த கிழமையே DeepSeek தனது AI செயலியை Apple நிறுவனத்தின் app store இல் அறிமுகம் செய்திருந்தது. திங்கள் வரையில் DeepKeep கின் செயலி ChatGPT செயலியின் பதிவுகளின் எண்ணிக்கைக்கு மேலாக download செய்து பதிவு செய்யப்பட்டுள்ளன.

DeepSeek நிறுவன AI (DeepSeek-R1) மிக குறைந்த விலைக்கு கிடைக்கும் என்றும் (20 முதல் 30 மடங்குகுறைந்த விலை), இது மிக குறைந்த சக்தியை மட்டுமே பயன்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதனால் இது மற்றைய AI செயலிகள் போல் server களில் இயங்குவதற்கு பதிலாக smartphone களில் இயங்கும்.

NVIDIA மட்டுமன்றி அமெரிக்காவின் Broadcom என்ற chip தயாரிக்கும் நிறுவனத்தின் பங்குகள் 17.4% பெறுமதியை திங்கள் இழந்துள்ளது. Marvell Technology 19.1% பங்குச்சந்தை பெறுமதியை இழந்துள்ளது. Google நிறுவனம் 4.2% பங்குச்சந்தை பெறுமதியை இழந்துள்ளது.

மேற்படி அமெரிக்க நிறுவனங்களின் வீழ்ச்சிக்கு முன் ஜப்பானின் முதலீட்டு நிறுவனமான SoftBank என்ற நிறுவன பங்குகள் 8.3% இழப்பை அடைந்திருந்தது. பின் ஐரோப்பாவின் ASML 7% பெறுமதியை இழந்திருந்தது.