இன்று வியாழன் சீனா தான் அமைக்கவுள்ள China Space Station (CSS) என்ற விண்வெளி ஆய்வு கூடத்துக்கான முதல் பாகத்தை ஏவி உள்ளது. சீனாவின் விண்வெளி ஆய்வுகூட கட்டுமானம் மொத்தம் 11 ஏவல்களை கொண்டிருக்கும். அனைத்து ஏவல்களும் அடுத்த ஆண்டு இறுதிக்கு முன் முடிவடைந்து அந்த ஆய்வுகூடம் செயற்பட ஆரம்பிக்கும்.
இன்று ஏவப்பட்ட பாகமே பிரதான பாகமாகும். CSS சேவைக்கு வந்தபின் இது 6 பேரை கொள்ளக்கூடியதாக இருக்கும். மேலும் இரண்டு ஏவல்கள் மேலும் இரு பாகங்களை எடுத்து செல்லும். அதன்பின் 4 ஏவல்கள் ஆய்வுகூடத்துக்கு தேவையான பொருட்களை எடுத்து செல்லும். இறுதி 4 ஏவல்கள் விண்வெளி வீரரை எடுத்து செல்லும்.
சீனாவின் T வடிவிலான இந்த வின் ஆய்வுகூடம் இறுதியில் 100 தொன் எடை கொண்டதாக இருக்கும். ஆனாலும் தேவைப்படின் இதை பெருபிக்க தேவையான வசதிகளை கொண்டிருக்கும்.
சீனாவின் இந்த ஆய்வுகூடத்தில் பரிசோதனைகள் செய்ய சில தெரிவு செய்யப்பட்ட வெளிநாடுகளின் ஆய்வாளருக்கும் அழைப்பு விடப்பட்டு உள்ளது. University of Oslo விண்ணில் செய்யவுள்ள ஆய்வு ஒன்றும் அதில் அடங்கும்.
1998ம் ஆண்டு அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா ஆகிய உலக நாடுகள் எல்லாம் இணைந்து அனுப்பிய International Space Station (ISS) என்ற சர்வதேச வின் ஆய்வுகூடம் 450 தொன் எடை கொண்டது. இது தற்போதும் இயங்கி வருகிறது. ரஷ்யாவை இந்த திட்டத்தில் இணைந்த அமெரிக்கா சீனாவை இணைக்க மறுத்து இருந்தது. சீனா தனது சொந்த விண்வெளி ஆய்வுகூடத்தை உருவாக்க இதுவும் ஒரு காரணம்.