சீன, ரஷ்ய AI அறிவு வளர்கின்றன, பிரித்தானிய MI6 எச்சரிக்கை

சீன, ரஷ்ய AI அறிவு வளர்கின்றன, பிரித்தானிய MI6 எச்சரிக்கை

சீனாவினதும், ரஷ்யாவினதும் Artificial Intelligence (AI) அறிவு வேகமாக வளர்கின்றன என்று பிரித்தானியாவின் MI6 என்ற உளவு அமைப்பின் (Secret Intelligence Service) தலைவர் Richard Moore கூறியுள்ளார். இவரின் கூற்று ஏற்கனவே அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்த கூற்றுக்களுடன் இணங்கி உள்ளது.

சீனவினதும், ரஷ்யாவினதும் வளர்ச்சி அடுத்த 10 ஆண்டுகளில் உலக அரசியலை பெருமளவில் மாற்றி அமைக்கலாம் என்றும் Moore தெரிவித்து உள்ளார். குறிப்பாக இந்த இரு நாடுகளின் quantum engineering, engineering biology, பெருமளவு தரவுகள் (data), மிக சிறந்த கணனிகள் என்பன விரைவில் மேற்கின் ஆதிக்கத்துக்கு ஆபத்தாகலாம் என்றும் Moore கூறியுள்ளார்.

இவரின் பகிரங்க உரை நாளை செவ்வாய் இடம்பெறவுள்ள International Institute for Strategic Studies in London என்ற அமர்வில் வெளிவரலாம் என்று Reuters செய்தி நிறுவனம் கூறுகிறது.

ரஷ்யாவின் இணைய தாக்குதல்காரர் அண்மையில் அமெரிக்காவின் இணைய பாதுகாப்பு software ஆன SolarWind மீது செய்து கொண்ட தாக்குதல் ஒரு உதாரணமாக காட்டப்பட்டு உள்ளது. SolarWind மிக உரமான software ஆக கருதப்பட்டது. அனால் அது தற்போது முற்றாக உடைக்கப்பட்டு உள்ளது.

இணையத்தில் சொந்த பாதுபாப்புடன் இயங்க முடியாத பிரித்தானியாவின் MI5, MI6 மற்றும் GCHQ ஆகிய உளவு அமைப்புகள் கடந்த மாதம் முதல் அமெரிக்காவின் Amazon நிறுவனத்தின் cloud computing சேவையை பெற ஆரம்பித்து உள்ளன.