சீனாவின் பொருளாதாரம் அமெரிக்காவின் பொருளாதாரத்தை 2028ம் ஆண்டு பின்தள்ளும் என்று பிரித்தானியாவின் CEBR (Centre for Economics and Research) கணிப்பிட்டுள்ளத.
சீனா கரோனா பரவலை திறமையாக கட்டுப்படுத்தியதே இதற்கு முதன்மை காரணம் என்கிறது CEBR.
CEBR தனது உலக பொருளாதார ஆய்வை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 26ம் திகதி வெளியிடும்.
கரோனா காரணமாக உலகின் பெரிய பொருளாதாரங்கள் அனைத்தும் வீழ்ச்சி அடைய, சீனா மட்டும் இந்த ஆண்டு 2% வளர்ச்சியை அடைகிறது.
அமெரிக்கா கரோனா காரணமாக வீடுகளுள் முடங்கி இருக்கும் தன் மக்களுக்கு பெரும் உதவி பணம் வழங்க, அவர்கள்அப்பணத்தை செலவழித்து Amazon போன்ற இணையங்கள் மூலம் மேலும் சீன உற்பத்திகளை கொள்வனவு செய்ய, சீன பொருளாதாரம் வளர்கின்றது. அமெரிக்க பொருளாதாரம் வளரவில்லை.
உலக பொருளாதாரத்தின் 17.8% தற்போது சீனாவின் பங்கை கொண்டுள்ளது.
அமெரிக்காவில் மட்டும் கரோனாவுக்கு இதுவரை 330,000 பேர் பலியாகியும், 18.5 மில்லியன் பேர் நோய் தொற்றியும் உள்ளனர்.
அதேவேளை இந்தியா 2030ம் ஆண்டளவில் உலகின் 3வது பெரிய பொருளாதாரம் ஆகும் என்றும் கூறப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டு இந்தியா பிரித்தானியாவை பின் தள்ளி உலக பொருளாதாரத்தில் 5ம் இடத்தை அடைந்து இருந்தாலும், பின் கரோனாவின் பாதிப்பால் பின்னேறி உள்ளது.