சீன பொருட்களுக்கான ரம்பின்வரி 54% ஆக உயர்வு

சீன பொருட்களுக்கான ரம்பின்வரி 54% ஆக உயர்வு

சீனாவில் இருந்து அமெரிக்கா வரும் பொருட்களுக்கான ரம்பின் வரி (tariff) புதன்கிழமை 54% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே 20% ஆக இருந்த இந்த வரியே தற்போது 54% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

சீனா ரம்பின் புதிய வரிகளுக்கு பதில் வரிகள் அறவிட உள்ளதாக முன்னர் அறிவித்து இருந்தது. சீனாவின் புதிய பதிலடி வரி விபரம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

அதேவேளை வியட்நாம் மீதான இறக்குமதி வரி 46% ஆகவும், கம்போடியா மீதான இறக்குமதி வரி 49% ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளன.

ஐரோப்பிய ஒன்றிய பொருட்கள் மீது ரம்ப் 20% இறக்குமதி வரியை அறிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியமும் பதிலடி வரிகளை அறிவிக்கும் என்று கூறியுள்ளது.

ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளுக்கும் 20% க்கும் மேலான வரி அரவிடப்படுகிறது.

சுமார் 60 நாடுகளுக்கு குறைந்தது 10% இறக்குமதி வரி புதன் முதல் ரம்பால் அறிவிக்கப்பட்டுள்ளது.