சீன பாதுகாப்பு அமைச்சர் வீட்டு காவலில்?

சீன பாதுகாப்பு அமைச்சர் வீட்டு காவலில்?

இரண்டு கிழமைகளாக பொது இடங்களில் தோன்றாது உள்ள சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் Li Shangfu ஊழல் விசாரணைகள் காரணமாக வீட்டு காவலில் வைக்கப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

சீன சனாதிபதி சீயின் ஆட்சியில் அரச ஊழியர் ஊழல் செய்வது கடுமையாக தண்டிக்கப்பட்டு வருகிறது. அமைச்சர்கள் போன்ற உயர் அதிகாரிகளும் தண்டிக்கப்பட்டு வருகின்றனர்.

Li Shangfu சனாதிபதி சீயினால் பதவிக்கு கொண்டுவரப்பட்டு இருந்தாலும் ஊழல் அறியப்பட்டவுடன் விசாரணைகள் ஆரம்பித்துள்ளன. Li Shangfu இராணுவ தளபாடங்களை கொள்வனவு செய்யும் பிரிவுக்கு 2017 முதல் 2022 வரை தலைமை வகித்துள்ளார்.

2018ம் ஆண்டு அமெரிக்கா Shangfu மீது தடை விதித்து இருந்தாலும் சனாதிபதி சீ Shangfu ஐ பாதுகாப்பு அமைச்சர் ஆக்கியிருந்தார். ஆனால் ஊழல் விசாரணை அவரின் பதவியை பறிக்கிறது.

Shangfu உடன் மேலும் 8 உயர் அதிகாரிகள் விசாரணையில் உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

சனாதிபதி சீயால் வெளியுறவு அமைச்சராக பதவிக்கு கொண்டுவரப்பட்ட Qin Gang என்பவர் ஜூலை மாதம் பதவி பறிக்கப்பட்டு விசாரணையில் உள்ளார்.