சீன சனாதிபதி சீயும் செப்டம்பர் 9ம், 10ம் திகதிகளில் டெல்லியில் இடம்பெறவுள்ள G20 அமர்வுக்கு பயணிக்கார் என்று கூறப்படுகிறது. அதற்கான காரணம் கூறப்படவில்லை.
சனாதிபதி சீக்கு பதிலாக சீன Premier Li Qiang பயணித்து பங்கெடுப்பார்.
அமெரிக்க சனாதிபதி பைடென் டெல்லி G20 அமர்வுக்கு பயணிப்பார். அங்கு பைடென் சீயை சந்திக்கக்கூடும் என்று முன்னர் கருதப்பட்டது. ஆனால் சீ டெல்லி செல்லாவிடில் பைடென்-சீ சந்திப்பு சாத்தியமில்லை.
அண்மையில் 4 பைடென் அதிகாரிகள் சீனா சென்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தனர்.
ரஷ்ய சனாதிபதி பூட்டினும் டெல்லிக்கு பயணிக்கார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.