சீன சனாதிபதி சீ ஜின்பிங் (Xi JinPing) இன்று திங்கள் ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ சென்றுள்ளார். சீயின் இன்றைய பயணம் ரஷ்யாவின் யூக்கிறேன் மீதான ஆக்கிரமிப்பை மையமாக கொண்டது. அதேவேளை சீயின் மாஸ்கோ பயணத்தால் விசனம் கொண்டுள்ளது அமெரிக்கா.
பூட்டினும், சீயும் ஒருவரை மற்றவர் புகழ்ந்து பேசியுள்ளனர். பூட்டியின் சீயை “dear friend” என்று பாராட்டி உள்ளார். சீனாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையிலான உறவும் இருவராலும் புகழப்பட்டு உள்ளது.
ஆனால் சீயின் பயணத்தால் விசனம் கொண்ட அமெரிக்க சனாதிபதி சீயின் பயணம் இராஜதந்திர மூடிமறைப்பு (diplomatic cover) என்று கூறியுள்ளார் அமெரிக்க சனாதிபதி பைடென். குறிப்பாக ICC பூட்டினை கைது செய்ய அறிவிப்பு விடுத்தது சில தினங்களில் சீ மாஸ்கோ சென்றதை மேற்கு விரும்பவில்லை.
சிலவேளை ICC அவசரப்பட்டு கைது அறிவிப்பை செய்தது சீயின் பயணத்தை தடுக்கும் நோக்கம் கொண்டதாகவும் இருக்கலாம். சீயின் மாஸ்கோ பயணம் கைது அறிவிப்புக்கு முன் தீர்மானிக்கப்பட்ட ஒன்று.
சீனா ஒரு யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தினால் அது தற்போது ரஷ்ய படைகளுக்கும், யூக்கிறேன் படைகளுக்கும் இடையிலா போர்முனையை நிரந்தர எல்லை ஆகிவிடும் என்று அமெரிக்கா பயம் கொண்டுள்ளது. காஸ்மீரிலும், வட/தென் கொரியாக்களுக்கு இடையேயும் இவ்வாறே எல்லைகள் உருவாகின.
மேற்கு நாடுகளின் ஆயுதங்களை நம்பி போராடும் யூக்கிறேன் சனாதிபதி செலன்ஸ்கி சீனா ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் வழங்க ஆரம்பிப்பதை தடுக்க முனைகிறது. செலன்ஸ்கி சீயுடன் நேரடியாக கதைக்க முனைந்தாலும் செலன்ஸிக்கு அந்த சந்தர்ப்பம் இதுவரை கிடைக்கவில்லை.