சீன சனாதிபதி ஒரு சர்வாதிகாரி என்று செவ்வாய் இரவு கலிபோர்னியாவில் இடம்பெற்ற நிதி திரட்டல் நிகழ்வு ஒன்றில் பைடென் கூறியுள்ளார். பைடெனின் இந்த கூற்று அமெரிக்க வெளியுறவு செயலாளர் திங்கள் அமெரிக்க-சீன உறவு மீண்டும் நலமாகிறது என்று கூறியபின் வந்துள்ளது.
பைடென் தனது கூற்றில் சீனாவின் பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதால் சீன சனாதிபதி சீ விசனம் கொண்டதாகவும், அது சர்வாதிகாரி போன்ற சீக்கு அவமானம் ஆகியதாகவும் பைடென் கூறியுள்ளார்.
பைடெனின் இந்த கூற்றுக்கு சீனா தரப்பில் இதுவரை கருத்துக்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. வெள்ளை மாளிகையும் கூற்றை பின்னர் விபரிக்கவில்லை.
இந்த கிழமை இறுதியில் சீனா சென்ற அமெரிக்க வெளியுறவு அமைச்சர் Blinken சீயை சந்தித்து இருந்தாலும், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் பாரிய தீர்மானங்கள் எதுவும் ஏற்பட்டிருக்கவில்லை.
அத்துடன் தான் சீனாவுக்கு எதிராக அமெரிக்கா, இந்தியா, அஸ்ரேலியா, ஜப்பான் ஆகிய நான்கு நாடுகளையும் கொண்ட Quad என்ற அமைப்பை உருவாக்கியதும் சீயின் விசனத்துக்கு காரணம் என்றுள்ளார் பைடென்.