சீன சனாதிபதி சீயை (Xi JinPing) ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவுக்கு அழைக்கிறார் ரஷ்ய சனாதிபதி பூட்டின். இந்த அறிவிப்பை பூட்டின் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டு உள்ளார். இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ கூட்டுறவை மேலும் வலுப்படுத்த உள்ளதாகவும் பூட்டின் கூறியுள்ளார்.
ரஷ்யாவின் அரச தொலைக்காட்சி ஒளிபரப்பிய இருவருக்கும் இடையில் இடம்பெற்ற இணைய உரையாடலில் இந்த அழைப்பு இருந்துள்ளது.
“We are expecting you, dear Mr. Chairman, dear friend, we are expecting you next spring on a state visit to Moscow” என்று கூறியுள்ளார் பூட்டின்.
ஆனாலும் சீயின் கூற்றில் மாஸ்கோவுக்கான பயணம் தொடர்பாக எதுவும் கூறப்படவில்லை.
பூட்டின் ரஷ்யாவை முழுமையாக மேற்கு நாடுகளின் இருந்து பிரித்து, சீனாவுடன் பிணைக்க தீர்மானித்து உள்ளமை தற்போது தெளிவாக உள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை ரஷ்யாவின் நிதி அமைச்சு ரஷ்யாவின் National Wealth Fund இல் சீன நாணயத்தின் பங்களிப்பை இரண்டு மடங்காக அதிகரித்தும் உள்ளது. அதனால் சீன யுவான் தற்போது 60% பங்கை கொண்டுள்ளது. அச்செயல் சீனாவின் நாணயத்தை மேலும் உரப்படுத்தி உள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் பூட்டினும், சீயும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுக்கு எல்லை இல்லை (no limits) என்று கூறியிருந்தனர்.