சீன கணனி வளர்ச்சிக்கு கால் கட்டு போட பைடென் அறிவிப்பு

சீன கணனி வளர்ச்சிக்கு கால் கட்டு போட பைடென் அறிவிப்பு

அமெரிக்கா ஏற்கனவே சீனா மீது பல தொழில்நுட்ப தடைகளை கொண்டிருந்தாலும், இன்று வெள்ளிக்கிழமை அமெரிக்க சனாதிபதி சீனா மீது மேலும் தடைகளை விதிப்பதாக கூறியுள்ளார்.

இதுவரை Intel, AMD போன்ற கணினிகளுக்கான Chip தயாரிக்கும் அமெரிக்க நிறுவனங்கள் சீனாவுக்கு அதிநவீன chip விற்பனை செய்வதை தடை அமெரிக்கா தடை செய்திருந்தது. இதனால் சீனா தான் சொந்த chip தயாரிப்பு முயற்சியில் இறங்கி, ஓரளவு வெற்றியும் கண்டது.

தற்போது பைடென் அரசு மேலும் ஒரு படி சென்று கணனி chip தயாரிக்கும் இயந்திரங்களையும் அமெரிக்க நிறுவனங்கள் சீனாவுக்கு விற்பனை செய்ய தடை விதிக்கிறது. குறிப்பாக KLA Corp, Lam Research Corp, Applied Materials Inc ஆகிய அமெரிக்க நிறுவனங்களின் chip தயாரிப்பு இயந்திரங்கள் சீனா செல்வதை தடுக்கவே அமெரிக்க சனாதிபதி பைடென் முனைகிறார்.

குறிப்பாக supercomputer தயாரிப்பில், பயன்பாட்டில் சீனா வல்லமை கொள்வதை தடுக்க விரும்புகிறார் பைடென்.

முன்னர் Huawei போன்ற சீனா தொழிநுட்ப நிறுவனங்கள் மீது அமெரிக்கா கடும் தடைகளை விதித்து இருந்தது. அத்தடைகளால் Huawei அமெரிக்க சந்தையை இழந்து இருந்தாலும் தொழிநுட்ப அறிவு வளர்ச்சியை இழக்கவில்லை. Huawei தற்போது தனது சொந்த chip தயாரிப்பை செய்கிறது.