நேற்றைய தினம் இத்தாலி சீனாவின் Belt and Road Initiative என்ற திட்டத்தில் இணைந்தது மட்டுமன்றி, முற்காலங்களில் சீனாவில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட மற்றும் சட்டவிரோதமாக பெறப்பட்ட சீன கலாச்சார அரும்பொருட்களை (cultural relics) சீனாவிடம் மீண்டும் கையளிக்கவும் இணங்கி உள்ளது.
.
இந்த இணக்கத்தின்படி மொத்தம் 796 சீன அரும்பொருட்கள் சீனாவிடம் திருப்பி வழங்கப்படவுள்ளன. இந்த அரும்பொருட்களுள் சுமார் 4300 முதல் 4600 வருடங்களுக்கு முற்பட்ட (கி.மு 2600 – கி.மு.2300) Majiayao செங்களி பாத்திரமும் (red clay pot) அடங்கும்.
.
சுமார் 10 வருட நீதிமன்ற விசாரணைகளின் பின் இத்தாலியின் Milan நகர நீதிமன்றம் இப்பொருட்கள் சீனாவுக்கு திருப்பி அனுப்படவேண்டும் என்றும் கூறி இருந்தது.
.
சீனாவில் பெருமளவு பண்டைய அரண்மனைகள் இருந்தாலும், அவற்றின் உள்ளே தற்போது எதுவுமில்லை. இங்கிருந்த பண்டைய பொருட்கள் 1840 ஆம் ஆண்டு முதல் 1949 ஆம் ஆண்டு வரையான காலத்தில் களவாடப்பட்டு, மேற்கு நாடுகளுக்கு எடுத்து செல்லப்பட்டன.
.
அண்மையில் அமெரிக்காவும் தம்மிடம் உள்ள 361 பண்டைய சீன பொருட்களை சீனாவிடம் மீண்டும் கையளிக்க இணங்கி இருந்தது.
.
பிரித்தானிய சுமார் 3,000 வருடம் பழமையான Tiger Ying என்ற பாத்திரத்தை கடந்த டிசம்பர் மாதம் சீனாவுக்கு திருப்பி அனுப்பி இருந்தது. இந்த பாத்திரம் பிரித்தானிய இராணுவத்தினர் ஒருவரால் இரண்டாம் ஒபிய யுத்த காலத்தில் (Second Opium War, 1856-1860) களவாடப்பட்டு இருந்தது.
.
படம்: Tiger Ying (SACH)
.