அமெரிக்காவின் Intel மற்றும் AMD (Advanced Micro Devices) ஆகிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தயாரிக்கும் chip களை சீன அரச திணைக்களங்களின் கணினிகளில் இருந்து நீக்குமாறு சீனா அறிவித்துள்ளது.
மேற்படி chip களுக்கு பதிலாக சீன நிறுவனங்கள் தயாரிக்கும் chip கள் பயன்படுத்தப்படும். அதனால் மேற்படி அமெரிக்க நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் பல பில்லியன் டாலர் வருமானத்தை இழக்கும்.
2023ம் ஆண்டில் Intel தனது வருமானத்தின் 27% த்தை சீனாவில் இருந்தே பெற்றுள்ளது. AMD நிறுவனம் 15% வருமானத்தை சீனாவில் இருந்து பெற்றுள்ளது.
Microsoft நிறுவனத்தின் Windows OS, Oracle நிறுவனத்தின் Database software களையும் தவிர்க்க சீனா அறிவித்துள்ளது.
இவற்றை சீன அரசு தவிர்த்தால் மக்களும் மெதுவாக மேற்படி தயாரிப்புகளை தவிர்க்க ஆரம்பிப்பர்.
இந்த செய்தியின் பின் Intel, AMD முறையே 4.5%, 2.0% பங்குசந்தை பெறுமதிகளை திங்கள் காலை இழந்துள்ளன.