சீன, அமெரிக்க இராணுவ முறுகல் மேலும் உக்கிரம்

சீன, அமெரிக்க இராணுவ முறுகல் மேலும் உக்கிரம்

சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான இராணுவ முறுகல் நிலை இன்று புதன்கிழமை மேலும் உக்கிரம் அடைந்து உள்ளது. அமெரிக்காவின் U-2 வகை வேவு விமானம் ஒன்று சீனாவின் no-fly zone மேலாக பறந்த பின் சீனா இன்று இரண்டு பாரிய ஏவுகணைகளை ஏவி உள்ளது. அதில் ஒன்று விமானம் தாங்கி கப்பல்களை அழிக்கவல்லது (aircraft carrier killer).

கடந்த சில தினங்களாக சீனா தென் சீன கடல், Bohai, Yellow sea உட்பட 4 கடல்களில் பாரிய யுத்த பயிற்சிகளை செய்கிறது. அதற்கு ஏற்ப பயிற்சி இடங்களில் no-fly zone களை அறிவித்தும் உள்ளது. அந்நிலையில் அமெரிக்கா தனது U-2 வகை வேவு விமானம் ஒன்றை அப்பகுதியின் மேலால் பறக்க விட்டுள்ளது. அதனால் விசனம் கொண்டுள்ளது சீனா.

விசனம் கொண்ட சீனா ஆயுதம் தாங்கிய DF-26B வகை ஏவுகணை ஒன்றையும், DF-21D வகை ஏவுகணை ஒன்றையும் தென் சீன கடல் நோக்கி ஏவி உள்ளது. DF-26B வகை ஏவுகணை அணுகுண்டை அல்லது சாதாரண குண்டை 4,000 km தூரம் காவி தாக்க வல்லது.  DF-21D வகை ஏவுகணை 1,500 km தூரம் சென்று விமானம் தாங்கி கப்பல்களை தாக்கி அழிக்க வல்லது.

தாம் சர்வதேச விதிகளுக்கு அமையவே பறந்ததாக அமெரிக்கா கூறி உள்ளது. வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள அமெரிக்க சனாதிபதி தேர்தலின் முன் தற்போது ஆதரவு மங்கி உள்ள ரம்ப் அமெரிக்க மக்களை திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபடலாம் என்று கருதப்படுகிறது.

U-2 வகை வேவு விமானங்கள் 70,000 அடி உயரத்தில் பறக்க வல்லன. Cold War காலத்தில் அமெரிக்காவின் U-2 விமானம் ஒன்று பாகிஸ்தானில் இருந்து நோர்வே நோக்கி, சோவியத் மேலாக வேவு பார்த்து பறந்தது. ஆனால் இடைவழியில் சோவியத் அதை சுட்டு வீழ்த்தி இருந்தது. விமானியும் கைதாகி இருந்தார்.