சீனா மீது மேலும் 50% வரி ஆறவிடுவேன், ரம்ப் மிரட்டல் 

சீனா மீது மேலும் 50% வரி ஆறவிடுவேன், ரம்ப் மிரட்டல் 

அமெரிக்க பொருட்களுக்கு சீனா அண்மையில் நடைமுறை செய்த 34% மேலதிக பதிலடி வரியை செவ்வாய்க்கு முன்னர் நீக்காவிட்டால் சீனா மீதான இறக்குமதி வரியை தான் மேலும் 50% ஆல் அதிகரிக்க உள்ளதாக சனாதிபதி ரம்ப் திங்கள் மிரட்டி உள்ளார்.

ரம்பின் 50% மிரட்டலுக்கு பின் சீனாவை அழுத்துவது அல்லது மிரட்டுவது (pressuring or threatening) சரியான வழியல்ல என்று சீன தூதரகம் கூறியுள்ளது.

சுமார் 45,000 ஆக உயர்ந்து இருந்த அமெரிக்க DOW பங்கு சந்தை சுட்டி தற்போது 37,000 ஆக வீழ்ச்சி அடைந்து இருந்தாலும் ரம்பின் ஆலோசகர் Peter Navarro இந்த சுட்டி விரைவில் 50,000 ஆக உயரும் என்று கூறுகியுள்ளார்.

ஆனால் JPMorgan Chase வங்கியின் CEO Jamie Dimon உலக பொருளாதார மந்த நிலை உருவாகும் சாத்தியம் அதிகமாக உள்ளது என்றுள்ளார்.

சீனா அமெரிக்க பொருட்களுக்கு 34% பதிலடி வரியை அறிவித்த பின்னாலேயே உலக பங்கு சந்தைகள் பாரிய வீழ்ச்சியை அடைந்து இருந்தன.