ரம்ப் அரசு சீனா மீது நடைமுறை செய்யவிருந்த புதிய வரிகளை தற்காலிகமாக இடைநிறுத்தி உள்ளது. இந்த செய்தியை Steven Mnuchin என்ற அமெரிக்காவின் Treasury Secretary தெரிவித்து உள்ளார். இவர் அண்மையில் சீனா சென்று திரும்பியவர். இது ரம்ப் தரப்பின் பின்வாங்கலாகவே கருதப்படுகிறது.
.
.
சீனா அமெரிக்காவில் இருந்து செய்யும் கொள்வனவுகளை மேலும் அதிகரிக்க இணங்கி உள்ளதாக Mnuchin கூறி உள்ளார். ஆனால் திடமாக எந்தவொரு திட்டத்தையும் கூறவில்லை.
.
.
இந்த விடயம் தொடர்பாக சீனாவின் பத்திரிகையான Xinhua அமெரிக்கா, சீனா ஆகிய இரண்டு தரப்பும் trade war ஒன்று உருவாகுவதை தவிர்க்க இணங்கி உள்ளனர் என்று மட்டுமே கூறியுள்ளது.
.
அதேவேளை அமெரிக்காவின் Commerce Secretary விரைவில் சீனா செல்வார் என்றும் கூறப்படுகிறது.
.
.
அதேவேளை அமெரிக்காவின் Commerce Secretary விரைவில் சீனா செல்வார் என்றும் கூறப்படுகிறது.
.
தற்போது வருடம் ஒன்றில் சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கான இறக்குமதி அமெரிக்காவில் இருந்து சீனாவுக்கான இறக்குமதியிலும் $375 பில்லியன் அதிகம். அதாவது சீனா $375 பில்லியனை அதிகமாக பெறுகிறது. இந்த தொகையை குறைந்தது $200 பில்லியனால் குறைப்பேன் என்று ரம்ப் கூறியிருந்தார்.
.
.