சீன பொருட்கள் மீதான மிகையான இறக்குமதி வரியை (tariff) பெருமளவில் குறைக்க உள்ளதாக சனாதிபதி ரம்ப் செவ்வாய் கூறியுள்ளார். அவர் தனது கூற்றில் சீன பொருட்கள் மீதான இறக்குமதி வரி “come down substantially, but it won’t be zero” என்றுள்ளார்.
ரம்பின் இந்த கூற்றுக்கு சற்று முன் JPMorgan வங்கி தலைமையிலான அமர்வு ஒன்றில் ரம்பின் Treasury செயலாளர் Scott Bessent அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான அதி உயர் வரிகள் பொருளாதார தடைகளை ஒத்தது என்றும், அவை நீண்ட காலம் தொடர முடியாதவை என்றும் கூறியுள்ளார்.
அமெரிக்க பங்கு சந்தையின் பாரிய வீழ்ச்சி, அமெரிக்க டாலரின் பெறுமதி வீழ்ச்சி, சீனா இரண்டு Boeing விமானங்களை அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்பியது, அமெரிக்கா அரச bond கடன் அடைந்த வீழ்ச்சி போன்றன ரம்பை பின்வாங்க வைத்துள்ளது.
இந்த செய்தியால் ஹாங் காங் Hang Seng பங்கு சந்தை சுட்டி புதன்கிழமை 2.5% ஆலும், ஜப்பானின் Nikkei சுட்டி 2% ஆலும், தென் கொரியாவின் Kospi சுட்டி 1.5% ஆலும் உயர்ந்து உள்ளன.
பத்திரிகையாளர் ஒருவர் சீனாவுடனான பேச்சுக்களில் கடுமையாக செயல்படுவீர்களா (play hardball) என்று கேட்டபோது, ரம்ப் உடனடியாக இல்லை (No) என்று பதிலளித்துள்ளார். அத்துடன் சீனாவுடன் தான் “be very nice” ஆக செயல்பட உள்ளதாகவும் ரம்ப் கூறியுள்ளார்.