சீனா வெளியிடும் கரோனா தொடர்பான எல்லா அறிக்கைகளையும் நம்ப மறுக்கும் மேற்கு நாடுகள் சீனா கரோனா பரவலை திறமையாக தடுத்ததை தற்போது மறைமுகமாக ஏற்றுக்கொள்கின்றன.
அமெரிக்கா வெளிநாடுகளுக்கு செல்லும் தனது மக்களுக்கு கரோனா தொடர்பான எச்சரிக்கையை Level 1 முதல் Level 4 வரையான அளவீடு மூலம் தெரிவிக்கிறது. அம்முறையில் Level 1 நாடுகள் குறைந்த (low) கரோனா ஆபத்தை கொண்டன, Level 4 நாடுகள் மிகையான ஆபத்தை (very high) கொண்டன.
உலகின் சுமார் 80% நாடுகளுக்கு அமெரிக்கா very high வகையான Level 4 தரம் வழங்கி உள்ளது. கனடா, பிரித்தானியா, ஐரோப்பிய நாடுகள், இந்தியா எல்லாமே Level 4 ஆபத்தில் உள்ளதாக அமெரிக்கா கூறுகிறது. ஆனால் சீனா Level 1 ஆபத்தில் உள்ளதாக அமெரிக்கா கூறுகிறது.
இலங்கை அமெரிக்காவின் கணிப்பில் Level 2 (moderate) ஆபத்தில் வகையில் உள்ளது.
பிரித்தானியாவும் இந்தியா உட்பட 40 நாடுகளை தனது “Red List” இல் வைத்துள்ளது. இந்த நாட்டவர், இந்த நாடுகளுக்கு முன்னைய 10 தினங்களுள் சென்றவர்கள் பிரித்தானியாவுள் தற்போது அனுமதிக்கப்படார். ஆனால் சீனா அந்த Red List இல் இல்லை.
இலங்கை Red List அட்டவணையில் இல்லை.
2019ம் ஆண்டில் அமெரிக்காவின் Atlanta (ATL) விமான நிலையம் 110.5 மில்லியன் பயணிகளை கையாண்டு உலகின் முதலாவது விமான நிலையமாக இருந்தது. ஆனால் கரோனா காரணமாக அங்கு பயணிகள் தொகை 42.9 மில்லியன் ஆக குறைய, சீனாவின் Guangzhou (CAN) விமான நிலையம் 43.7 மில்லியன் பயணிகளை கையாண்டு முதல் இடத்தை கொண்டுள்ளது.