சீனாவை விட்டு வெளியேறுகிறது IBM?

சீனாவை விட்டு வெளியேறுகிறது IBM?

அமெரிக்காவின் IBM என்ற தொழில்நுட்ப நிறுவனம் சீனாவை விட்டு வெளியேறுகிறது என்றும், அதன் ஒரு படியாக 1,000 ஊழியர்களை நீக்கி உள்ளது என்றும் Yicai என்ற சீன அரச செய்தி நிறுவனம் சேவையை கூறியுள்ளது. ஆனால் IMB இது தொடர்பாக கருத்து எதையும் இதுவரை கூறவில்லை.

அமெரிக்க நிறுவனங்கள் சீனாவுக்கு முதல் தரமான தொழில்நுட்பங்களை விற்பனை செய்யக்கூடாது என்று அமெரிக்கா தடை விதித்துள்ளது. அதேவேளை சீன நிறுவனங்கள் முதல் தரமான தொழில்நுட்பங்களை விற்பனை செய்ய,  அமெரிக்க நிறுவனங்களின் இரண்டாம் தர தொழில்நுட்பங்களுக்கு சீனாவில் சந்தை இல்லை.

முடிந்த ஆண்டுக்கான IBM யின் சீன வருமானம் அதற்கு முன்னைய ஆண்டிலும் 19.6% குறைவு.

IBM நிறுவனத்தின் China Development Lab, China Systems Lab ஆகியன 1999ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இருந்தன.

சுமார் 3 மாதங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் Microsoft நிறுவனமும் 100 சீன ஊழியர்களை இடமாற்றம் செய்ய அறிவித்திருந்தது. 1992ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட Microsoft Research Lab Asia சீனாவில் Microsoft ஆளுமை பெற காரணமாக இருந்தது. அக்காலங்களில் சீன தொழில்நுட்ப நிறுவனங்கள் எதுவும் இருந்திருக்கவில்லை.