தென் பசுபிக் கடலில் உள்ள Solomon தீவு சீனா வசமாவதை தடுக்க அஸ்ரேலிய அமைச்சர் Zed Seselja என்பவர் Solomon தீவுக்கு விரைந்துள்ளனர். அஸ்ரேலிய பிரதமர் Scott Morrison இந்த செய்தியை புதன்கிழமை உறுதி செய்துள்ளார்.
அஸ்ரேலியாவின் International Development அமைச்சரே Solomon தீவுக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார். ஏப்ரல் மாதம் 1ம் திகதி சீனாவும், Solomon தீவும் செய்துகொண்ட பாதுகாப்பு உடன்படிக்கையை முறியடிப்பதே அஸ்ரேலியாவின் நோக்கம்.
ஏப்ரல் மாதம் 1ம் திகதி செய்து கொண்ட உடன்படிக்கையின்படி Solomon தீவில் குழப்பங்கள் ஏற்பட்டால் சீனா தனது போலீசை அல்லது படைகளை அனுப்பி உதவலாம். சீனா இவ்வகை ஆளுமை கொள்வதை அஸ்ரேலியா விரும்பவில்லை. Solomon தீவு அஸ்ரேலியாவுக்கு அண்மையில் இருப்பதால் தீவுக்கான பாதுகாப்பை இதுவரை அஸ்ரேலியாவே செய்து வந்துள்ளது.
அதேவேளை Solomon தீவு ஒரு சுதந்திர நாடு என்றும் அது சுயமாக எந்த முடிவும் எடுக்கலாம் என்றும் அஸ்ரேலியா கூறியுள்ளது.
மேற்படி இணக்கத்தை பயன்படுத்தி வருங்காலங்களில் சீனா Solomon தீவில் சீன கடற்படை தளத்தை அமைக்கலாம் என்று அஞ்சுகிறது அஸ்ரேலியா.