சீனாவுடன் ஒத்துழைக்க பயணிகள் விமானக்களுக்கு ஒபாமா அறிவுரை

EChinaSeaObama

சீனாவின் புதிய கிழக்கு சீன கடலின் மேலான வான் பாதுகாப்பு எல்லைக்குள் செல்லும் அமரிக்க விமானக்களை சீனாவின் வேண்டுகோளுக்கு அமைய முன்கூட்டியே அறிவிக்குமாறு ஒபாமா அரசு கேட்டுள்ளது. அமெரிக்க வான்படை சீனாவின் இந்த புதிய வான் பரப்பு எல்லை சட்டத்தை மீறினாலும், அமெரிக்க பயணிகள் மீறுவதை அமெரிக்கா விரும்பவில்லை. ஆனால் ஜப்பான் அரசு தமது பயணிகள் விமானக்களை அவ்வாறு சீனாவுக்கு முன்கூட்டியே அறிவிக்க வேண்டாம் என கூறியுள்ளது.

அதேவேளை தாம் இந்த வான் பரப்பை தொடர்ச்சியாக கண்காணிக்க தொடங்கியுள்ளதாக சீனா கூறியுள்ளது.அதுமட்டுமன்றி இந்த வான் பரப்புள் வெள்ளிக்கிழமை நுழைந்த ஜப்பானின் பத்து F15 யுத்த விமானக்களையும் அவற்றுடன் வந்த அமெரிக்காவின் இரண்டு கண்காணிப்பு விமானக்களையும் SU-30 மற்றும் J-11 உட்பட்ட சில சீன யுத்த விமானக்கள் அருகில் சென்று அடையாளம் கண்டதாக சீனா அறிவித்துள்ளது.

இவ்வாறு சீன யுத்த விமானக்கள் அமெரிக்க மற்றும் ஜப்பான் யுத்த விமாங்களின் அருகில் செல்வது மிக ஆபத்தானதாகும். 2001 ஆம் ஆண்டில் நடபெற்றதுபோல் ‘விபத்து’ நடந்தால் அது அமெரிக்காவுக்கு பாதகமாக அமையலாம். இவை சீனாவின் விமான ஓடுபாதைகளில் அனுமதி மறுத்தாலும் இறங்க நேரிடலாம்.

மூன்றாம் உலகப்போர் (WW-III) இங்கு தொடங்காவிட்டாலும் இரண்டாம் பனிப்போர் (Cold War-II) இங்கு தொடங்கலாம். சீனா இந்த கிழக்கு சீன கடல் மேலான வான் எல்லையை நாளடைவில் நடைமுறையாக்கினால் பின் தென் சீன கடலிலும் ஒரு புதிய வான் எல்லை உருவாகலாம்.