சீனாவுக்கு யுத்த விமான பயிற்சி வழங்கிய அமெரிக்கர் கைது

சீனாவுக்கு யுத்த விமான பயிற்சி வழங்கிய அமெரிக்கர் கைது

Daniel Edmund Duggan என்ற, வயது 54, முன்னாள் அமெரிக்க யுத்த விமான பயிற்சி வழங்கும் விமானியை அஸ்ரேலியா வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளது. இவர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இவரை அஸ்ரேலிய மத்திய போலீசார் New South Wales பகுதியில் உள்ள Orange என்ற சிறு கிராமத்தில் கைது செய்துள்ளனர்.

பல ஆண்டுகள் அமெரிக்க விமான படையில் பணியாற்றிய Duggan பின்னர் அஸ்ரேலியா சென்று Top Gun Tasmania என்ற வர்த்தகத்தை ஆரம்பித்து இருந்தார். இந்த நிறுவனம் உல்லாச பயணிகளுக்கு யுத்த விமானங்களில் பறக்கும் அனுபவத்தை வழங்கி வந்தது. இந்த சேவையில் பணியாற்ற அமெரிக்காவில் இருந்தும், பிரித்தானியாவில் இருந்தும் முன்னாள் விமானிகள் வரவழைக்கப்பட்டனர்.

Top Gun Tasmania நிறுவனத்தை விற்பனை செய்த Duggan 2014ம் ஆண்டு சீனாவின் தலைநகர் பெய்ஜிங் சென்றார். 2017ம் ஆண்டு சீனாவின் Qingdao என்ற இடத்தில் AVIBIZ Limited என்ற விமான பயிற்சி நிறுவனத்தை ஆரம்பித்தார். இந்த நிறுவனம் ஹாங்காங் நகரில் பதிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த நிறுவனம் 2020ம் ஆண்டு மூடப்பட்டுள்ளது.

அஸ்ரேலியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நாடுகடத்தில் சட்டம் அஸ்ரேலிய குடிமகன் ஒருவரை அமெரிக்காவுக்கு நாடுகடத்த வழி செய்கிறது.

கடந்த கிழமை பிரித்தானியாவும் தனது முன்னாள் விமானிகளை சீனாவுக்கு பயிற்சி வழங்க வேண்டாம் என்று பணித்துள்ளது. தமது விமானிகள் தொடர்ந்தும் சீனாவில் பணி செய்தால் அவர்கள் தண்டிக்கப்படுவர் என்றும் பிரித்தானியா மிரட்டி உள்ளது. அஸ்ரேலியாவும் இவ்வாறு தனது விமானிகளை மிரட்டி உள்ளது.