சீனாவுக்கு உளவு செய்த CIA அதிகாரிக்கு 20 ஆண்டுகள்

Mallory

முன்னாள் CIA (Central Intelligence Agency) அதிகாரியான Kevin Patrick Mallory, வயது 62, என்பவர் சீனாவுக்கு அமெரிக்காவின் பாதுகாப்பு தொடர்பான இரகசியங்களை வழங்கினார் என்ற குற்றம் 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க நீதிமன்றில் நிரூபிக்கப்பட்டது. அவரின் அந்த குற்றத்துக்கு இன்று வெள்ளிக்கிழமை 20-வருட சிறை தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. இவர் சீனா உளவாளியிடம் இருந்து $25,000 பெற்றார் என்றும் கூறப்பட்டுள்ளது.
.
பதவியில் இருந்தபோது Mallory CIA அமைப்பின் பல இரகசிய செயற்பாடுகளில் இணைந்து செய்யப்பட்டவர். அக்காலத்தில் அவரிடம்  ‘top-secret security clearance’ இருந்துள்ளது.
.
அமெரிக்காவில் உள்ள FedEx நிலையம் ஒன்றில் வைத்து இவர் இரகசிய ஆவணங்களை scan செய்து memory card ஒன்றுள் பிரதி எடுக்கும் வீடியோ பிரதியும் நீதிமன்றில் காண்பிக்கப்பட்டு இருந்தது.
.
2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இவர் சீனாவின் Shanghai நகரில் இருந்து அமெரிக்காவின் Chicago நகர் வந்த இவரிடம் $16,500 இருத்தமையே இவரின் மீது சந்தேகம் ஆரம்பிக்க காரணமாக இருந்துள்ளது.
.