பிரித்தானியாவின் BBC சேவை சீனாவில் இன்று வெள்ளிமுதல் தடை செய்யப்பட்டு உள்ளது. ஒரு கிழமைக்கு முன் பிரித்தானியா சீனாவின் CGTN (China Global Television Network) செய்தி சேவையை தடை செய்திருந்தது. பிரித்தானியாவின் அச்செயலும், BBC சேவையின் சீனா மீதான காழ்ப்பு தயாரிப்புகளுமே சீனா BBC சேவையை தடை செய்ய காரணம் என்று கருதப்படுகிறது.
CGTN செய்தி சேவை சீன கம்யூனிச கட்சியின் (Chinese Communist Party) கட்டுப்பாடில் உள்ள பரப்புரை நிறுவனம் என்பதாலேயே தாம் தடை செய்ததாக பிரித்தானிய கூறியுள்ளது.
BBC சேவையின் ஒலி, ஓளிபரப்புகள் ஏற்கனவே சீனாவில் தடை செய்யப்பட்டவை. சாதாரண சீனர் அவற்றை கேட்க, காண முடியாது. வெளிநாட்டவர் வாழும் இடங்கள், ஹோட்டல்கள், வெளிநாடுகளின் மாணவர்கள் தங்குமிடம் ஆகிய இடங்களில் மட்டுமே இதுவரை BBC சேவை கிடைத்து இருந்தது. புதிய தடையின் பின் அதுவும் நிறுத்தப்படும்.
அதேவேளை BBC உறுப்பினர்கள் சீனாவுள் நுழைவதும் தடுக்கப்படலாம். அதனால் BBC உறுப்பினர் களவாக நுழைந்தே சீன செய்திகளையும், தரவுகளையும் சேகரிக்க நேரிடும். அது அவர்களுக்கு ஆபத்தானாக அமையும்.