சீனா இன்று சனிக்கிழமை வரை 990.25 மில்லியன் கரோனா தடுப்பு ஊசிகளை மக்களுக்கு ஏற்றி உள்ளதாக சீனாவின் National Health Commission தரவுகள் கூறுகின்றன. சீனா தயாரித்த தடுப்பு ஊசிகள் மட்டுமே அங்கு வழங்கப்படுகின்றன.
சீனாவில் ஏற்றப்பட்ட தடுப்பு ஊசிகளின் தொகை உலக அளவில் ஏற்றப்பட்ட தடுப்பு ஊசிகளின் மொத்த தொகையின் 1/3 மடங்கு ஆகிறது. ஆனால் சீனாவின் சனத்தொகை உலக சனத்தொகையின் 1/5 மடங்கு மட்டுமே.
சில தினங்களில் நாள் ஒன்றுக்கு சுமார் 20 மில்லியன் தடுப்பு ஊசிகள் என்ற வேகத்தில் அங்கு தடுப்பு ஊசிகள் ஏற்றப்பட்டு உள்ளன. தற்போதைய தடுப்பு ஊசி வழங்கப்பட்டோர் தொகை அங்கு மே மாதம் 23ம் திகதி வரை வழங்கப்பட்டிருந்தோரின் தொகையின் இரண்டு மடங்காகும்.
உலக அளவில் தற்போது 2.5 பில்லியன் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு இருந்தாலும், அவற்றில் பெரும்பாலானவை செல்வந்த நாடுகளின் மக்களுக்கே வழங்கப்பட்டு உள்ளன.
இந்தியாவில் சுமார் 215 மில்லியன் ஊசிகள் ஏற்றப்பட்டு உள்ளன. அது இந்திய சனத்தொகையின் 15% மட்டுமே.
இலங்கையில் இதுவரை 2.38 மில்லியன் ஊசிகள் ஏற்றப்பட்டு உள்ளன. அது மொத்த சனத்தொகையின் 11% ஆகும்.