சீனாவில் அரச ஊழல் தடுப்பு உக்கிரம்

 ChinaFlag
சீனாவில் அரச அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஊழலில் ஈடுபடுவதை தடுக்க தற்போதைய அரசு கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. சாதாரண அதிகாரிகள் மட்டுமன்றி, பல உயர் அதிகாரிகளும் அங்கு தற்போது சிறை செல்கிறார்கள். சீனாவின் பெருளாதாரம் வேகமாக வளர்ந்த காலத்தில் அங்கு அதிகாரிகள் இலகுவில் ஊழல் செய்திருக்க முடித்து.
.
Cai Xiyum என்ற முன்னாள் உயர் அதிகாரிக்கு இன்று 12 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. Sinochem என்ற அரச இரசாயன பொருட்களுக்கான அமைச்சின் general manager ஆக பதவி வகித்த இவர், 1997 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையான காலத்தில், சுமார் $7.8 மில்லியன் பெறுமதியான இலஞ்சம் பெற்றிருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.
.
அதேவேளை Shandong Intermediate Peoples Court வேறு குற்றங்களுக்காக இவர் மீது மேலும் $435,000 தண்டம் விதித்துள்ளது.
.
கடந்த வியாழக்கிழமை Guizhou மாகாணத்து முன்னாள் உதவி governor தனது $23.2 மில்லியன் ஊழல் குற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளார். இவருக்கான தண்டனை இதுவரை அறிவிக்கப்படவில்லை. இவரும் பலவருட சிறை தண்டனை பெறுவார் என்று கூறப்படுகிறது.
.
Interpol அமைப்பின் தலைவராக இருந்த Meng Hongwei கடந்த செப்டெம்பர் மாதம் சீனா சென்றபோது கைது செய்யப்பட்டு உள்ளார். தற்போது இவர் மீது விசாரணைகள் தொடர்கின்றன. இவர் முன்னர் சீனாவின் public security அமைசின் தலைவராக இருந்தவர். அப்போது இவர் ஈடுபட்ட ஊழல்கள் தொடர்பாகவே கைது செய்யப்பட்டுள்ளார். இவரின் மனைவியும், பிள்ளைகளும் பிரான்சில் தங்கி உள்ளனர்.
.
2015 ஆம் ஆண்டில் Wang Yongchan என்ற முன்னாள் China National Petroleum Corp உதவி general manager தனது ஊழல் நடவடிக்கைகள் காரணமாக 20 வருட சிறை தண்டனை பெற்றிருந்தார்.
.