One Belt One Road (OBOR) என்ற சீனாவின் மிக பெரிய திட்டம் தொடர்பாக நடாத்தவுள்ள மாநாட்டுக்கு இந்திய பிரதமர் மோதி செல்லார் என்று கூறப்படுகிறது. இலங்கை சார்பில் பிரதமர் ரணில் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது. மொத்தம் 28 நாட்டு தலைவர்கள் அல்லது முக்கிய உறுப்பினர் இந்த மாதம் 14-15 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள இந்த மாநாட்டில் கலந்து கொள்வர் எனப்படுகிறது.
ரஷ்ய ஜனாதிபதி பூட்டின், பாகிஸ்தான் ஜனாதிபதி நவாஸ் ஷரிப், மலேசியா பிரதமர், இந்தோனேசிய ஜனாதிபதி, துருக்கி ஜனாதிபதி, வியட்நாம் ஜனாதிபதி, பர்மாவின் அங் சன் சுகி, பிலிப்பீன் ஜனாதிபதி ஆகியோரும் இந்த மாநாட்டில் பங்கு கொள்வர்.
.
G7 நாடுகளில் ஒன்றான இத்தாலியின் பிரதமரும் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார். அத்துடன் Hungary, Czech Republic, Switzerland, Spain, Kenya, Ethiopia ஆகிய நாட்டு தலைவர்களும் கூடவே பங்கு கொள்வார்.
.
.
இந்த OBOR திட்டத்துக்கு சீனா சுமார் $4 டிரில்லியன் ($4000 பில்லியன்) முதலீடு செய்யும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இதன் ஒரு அங்கமாக இலங்கையிலும் முதலீடுகள் செய்யப்பட்டு உள்ளன.
.