முதலில் உலகுக்கு cell phoneகளை அறிமுகப்படுத்திய நிறுவனங்களில் Motorola ஒன்று. ஆனால் Motorola பின்னர் iPhone, Samsun போன்ற தயாரிப்புக்களால் பின்தள்ளப்பட்டது. Cell phone சந்தையில் பின்தள்ளப்பட்ட Motorola வின் cell phone பிரிவை 2012 ஆம் ஆண்டில் Google நிறுவனம் U$12.5 பில்லியனுக்கு கொள்வனவு செய்திருந்தது.
ஆனால் Motorola பிரிவு Googleஇக்கு நட்டத்தையே கொடுத்தது. நட்டத்தை குறைக்க Google இந்த பிரிவில் உள்ள பலரை வேலை நீக்கமும் செய்திருந்தது. ஆனால் இந்த நடவடிக்கைகள் எதுவும் பயனளிகாதவிடத்து Google இந்த பிரிவை சீனாவின் Lenovo நிறுவனத்துக்கு $2.9 பில்லியனுக்கு விற்பனை செய்கிறது.
Linovo அண்மையில் IBM நிறுவனத்தின் low-end server பிரிவையும் கொள்வனவு செய்திருந்தது. அதற்கு முன், 2005 ஆம் ஆண்டில், Linovo IBM இன் ThinkPad உட்பட்ட laptop பிரிவையும் கொள்வனவு செய்திருந்தது.
Beijing இல் தலையகத்தை கொண்ட Linovo வின் 2012 ஆண்டுக்கான மொத்த வருமானம் U$29.5 பில்லியன், மொத்த இலாபம் $472 மில்லியன். இதற்கு உலக அளவில் 27,000 பணியாளர் உண்டு.