முற்றாக சீனாவினால் தயாரிக்கப்பட்ட C919 என்ற பெரிய அளவு பயணிகள் விமானம் இன்று வெள்ளோட்டம் விடப்பட்டுள்ளது. சுமார் 175 பயணிகளை காவக்கூடிய இந்த அகலம் குறைந்த (narrow-body), இரட்டை இயந்திர (twin-engine) விமானம் ஐரோப்பாவின் narrow-body வகை Airbus A320 விமானத்துக்கும், அமெரிக்காவின் narrow-body வகை Boeing 737 விமானத்துக்கும் போட்டியாக அமையும்.
.
.
சீனாவின் அரச நிறுவனமான COMAC (Commercial Aircraft Corporation of China) இந்த விமானத்தை தயாரித்து உள்ளது. அத்துடன் மேலும் சுமார் 200 நிறுவனங்களும், 36 பல்கலைக்கழகங்களும் இந்த உற்பத்தியில் செயல்பட்டு இருந்தன. இதற்கான இயந்திரம் (engine) CFM என்ற அமெரிக்க நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.
.
.
இதுவரை இந்த விமானங்கள் 570 கொள்வனவு செய்யப்பட ஒப்பந்தம்கள் (orders) செய்யப்பட்டு உள்ளன.
.
.
கடந்த வருடம் இதே சீன நிறுவனம் சுமார் 100 பயணிகளை காவக்கூடிய சிறிய அளவிலான ARJ21 என்ற பயணிகள் விமானத்தை தயாரித்து இருந்தது.
.
இந்த விமானத்தின் பெயரின் உச்சரிப்பு (C919 உச்சரிப்பு) சீன மொழியில் “everlasting” என்ற கருத்தை கொண்டது.
.
.