சீனா தனது விண் ஆய்வுகூட கட்டுமானத்துக்கான முதல் பாகத்தை கடந்த கிழமை ஏவி இருந்தது. அந்த ஆய்வுகூட பாகத்தை ஏவ பயன்படுத்திய ஏவியின் வெற்றுப்பகுதி (Long March 5b) சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை மீண்டும் பூமியை நோக்கி விழ உள்ளது. சுமார் 23 தொன் எடையும், 30 மீட்டர் உயரமும் கொண்ட இந்த வெற்று பாகம் எங்கு விழும் என்பதை இறுதி நேரத்தில்தான் அறிய முடியும்.
இது மத்திய கோட்டில் இருந்து வடக்கே 41 பாகைக்கும், கிழக்கே 41 பாகைக்கும் இடையிலான பகுதில் விழும். இப்பரப்பில் பல நகரங்களும், குடியிருப்புகளும் இருந்தாலும் பெரும்பாலான இடங்கள் கடலே.
இந்த பாகம் தற்போது மணித்தியாலத்துக்கு 29,000 km வேகத்தில் பூமியை வலம் வருகிறது. அதனால் இது எங்கே வளிமண்டலத்தில் நுழையும் என்பதை திடமாக கூற முடியாது. மிக வேகமாக வளிமண்டலத்துள் நுழையும் இதன் பெரும் பகுதி உராய்வு காரணமாக எரித்துவிடும். மிகுதி 20% முதல் 40% வரையான பாகம் பூமியில் விழும்.
பொதுவாக இவ்வகை வெற்று கலங்கள் உடனேயே வீழ்ந்துவிடும். ஆனால் மேற்படி சீன வெற்று கலம் பல தினங்களாக பூமியை வலம் வருகிறது. அது படிப்படியாக வளிமண்டலத்துள் நுழைந்து விழும்