சீனாவின் முதலீட்டில் நிக்கரகுவா கால்வாய்

NicaraguaCanal

அமெரிக்கா கட்டிய பனாமா கால்வாயை மிஞ்சும் வகையில் நிக்கரகுவாவை ஊடறுத்து புதியதோர் கால்வாயை கட்ட இன்று அடிக்கல் நாட்டியுள்ளது சீனா. நிக்கரகுவாவின் சன் குவான் (San Juan) ஆற்றையும் நிக்கரகுவா வாவியையும் உள்ளடக்கி செல்லப்போகும் இந்த கால்வாய், அத்திலாந்திக் சமுத்திரத்தையும் பசிபிக் சமுத்திரத்தையும் இணைக்கப்போகும் இரண்டாவது கால்வாய் ஆகும்.
.
ஆதியில் அமெரிக்கா இந்த வழியில் கால்வாய் ஒன்றை அமைப்பதை ஆராய்ந்து இருந்தது. ஆனால் பின்னர் பனாமாவை தெரிந்து கொண்டது.
.
2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நிக்கரகுவா 50 வருட ஒப்பந்தம் ஒன்றை Hong Kong Nicaragua Canal Development Investment Company உடன் செய்து கொண்டது. அதன்படி சுமார் $50 பில்லியன் செலவிட்டு சீனா இந்த கால்வாயை கட்டும். இந்த காவாய் சுமார் 278 km  நீளம் கொண்டதாக இருக்கும். ஆண்டு 2020 அளவில் இந்த கால்வாய் சேவைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கால்வாய் 25000 கொள்கலன்கள் வரை காவக்கூடிய மிகப்பெரிய கப்பல்கள் செல்ல வசதி கொண்டதாக இருக்கும். ஏறத்தாள 80 km  நீளம் கொண்ட பனாமா கால்வாய் 5000 கொள்கலன்கள் வரை ஏற்றக்கூடிய கப்பல்களை மட்டுமே ஊடே செல்லவிடும்.
.
நிக்கரகுவா கால்வாய் செயல்பாட்டுக்கு வந்த, சீனா விரும்பின் மேலும் 50 வருடங்களுக்கு உரிமையை நீடிக்கவும் உடன்பாடும் உள்ளது.
.
இந்த இரு கால்வாய்களுக்கும் போட்டியாக சுயஸ் (Suez) கால்வாயும் விஸ்தரிப்பு வேலைகளில் இறங்கி உள்ளது.
.