சீனா கால்களை கொண்ட தோனி வகை கப்பல்களை (barges) தயாரித்தமை மேற்குநாடுகளை மிரள வைத்துள்ளது. இவ்வகை கப்பல்கள் சீனா இன்னோர் நாட்டின் பாதுகாக்கப்பட்ட கரைகளை தாண்டி தனது படைகளை தரையிறக்கம் செய்ய பெருமளவில் உதவும் என்று கருதப்படுகிறது.
ஒரு இராணுவம் துறைமுகம் இல்லாத கடற்கரையில் தரை இறங்கும்போது படைகள், அவர்களின் கவச வாகனங்கள், பிரங்கிகள் போன்றவற்றை தரை இறக்க சிரமப்படும். கடல் அலைகள் தரை இறங்கும் கப்பல்களை அங்கும் இங்கும் ஆசைப்பதால் தரை இரங்கல் பணிக்கு ஆபத்து அதிகம்.
சீனாவின் இப்புதிய வகை கப்பல் தனக்கு கீழே உள்ள hydraulic கால்களை கீழே இறக்கி கடலின் அடியில் புதைப்பதால் கப்பல் ஒரு துறைமுகம்போல் திடமாக இருக்கும்.
அது மட்டுமன்றி இந்த கப்பல்களில் உள்ள நீண்ட பாலங்கள் தடைகள் பதிக்கப்பட்ட கரைகளை தாண்டி தரை இறங்கவும் உதவும். அத்துடன் இன்னோர் இவ்வகை கப்பலுடன் இணைக்கவும் உதவும்.
இந்த கப்பல்கள் தொடராக இணையும் வசதியையும் கொண்டதால் கரையில் இருந்து கடலுள் நீண்ட தூர பாதையும் அமைக்க முடியும்.

இந்த கப்பல்கள் தாய்வானை கைப்பற்ற பெருமளவில் உதவும் என்று கருதப்படுகிறது.