சீனாவின் அடுத்த வெளிநாட்டு கடற்படை தளம் இலங்கையில் அமையலாம் என்கிறது அமெரிக்கா ஆய்வு அமைப்பான AidData.
சீனா 2000ம் ஆண்டு முதல் இன்றுவரை மொத்தம் 46 நாடுகளில் சுமார் $30 பில்லியன் செலவில் 78 துறைமுகங்களை புதுப்பித்து உள்ளது. அதில் மிக பெரியது இலங்கையில் உள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகம். அதனால் இதுவே முதல் தெரிவாக இருக்கும் என்கிறது ஆய்வு. அத்துடன் இந்த துறைமுகம் பெருமளவில் சீனாவின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.
Equatorial Guinea நாட்டில் உள்ள Bata துறைமுகம், பாகிஸ்தானில் உள்ள Gwadar துறைமுகம் ஆகியனவும் சீனாவின் கடற்படை தளங்கள் ஆகலாம் என்றும் கூறுகிறது மேற்படி ஆய்வு.
ஆபிரிக்க நாடான Djibouti யில் தற்போது சீன படைத்தளம் ஒன்று உண்டு.
தற்போது உலகில் முதலாவது பெரிய கடற்படை சீனாவின் கடற்படையே. இதனிடம் 730 யுத்த கப்பல்கள் உள்ளன. அடுத்து ரஷ்யாவிடம் 598 யுத்த கப்பல்களும், வடகொரியாவிடம் 519 யுத்த கப்பல்களும், அமெரிக்காவிடம் 484 யுத்த கப்பல்களும் உள்ளன.
ஆனாலும் அமெரிக்காவிடமே அதிக விமானம் தாங்கி கப்பல்கள் உள்ளன.