ஆஸ்ரேலியா நோக்கி செல்கையில் கைதுசெய்யப்பட்டு Papua New Guineaவின் Manus தீவில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த அகதிகளில் 25 பேர் அமெரிக்கா செல்கிறார்கள். இவர்களுள் இலங்கை தமிழர், Rohingya இஸ்லாமியர், ஆப்கானிஸ்தானியர், பாகிஸ்த்தானியர், பங்களாதேசியர், ஈரானியர், சோமாலியர் ஆகியோர் அடங்குவர். செவ்வாய் பயணிக்கும் 25 பேரும் ஆண் அகதிகள். மேலும் 27 அகதிகள் Nauruவில் இருந்து புதன்கிழமை பயணிக்கிறார்கள்.
.
.
முன்னாள் ஜனாதிபதி ஒபாமா 1,250 அகதிகளை ஆஸ்ரேலியாவிடம் இருந்து பெற்றுக்கொள்ள இணங்கி இருந்தார். பதிலாக ஆஸ்ரேலியா Houndra மற்றும் Salvador அகதிகளை அமெரிக்காவிடம் இருந்து பெறவும் இணங்கி இருந்தது. பின்னர் ஜனாதிபதி டிரம்ப் இந்த உடன்படிக்கையை முதலில் நிராகரித்து இருந்தார். ஆனால் மீண்டும் முன்னைய உடன்படிக்கை நடைமுறைக்கு வந்துள்ளது.
.
.
இம்முறை அமெரிக்கா வரும் அகதிகளில் சிலர் அமெரிக்காவின் Gerogia மாநிலத்து Atlanta நகரில் குடியமர்த்தப்படுவர்.
.
கப்பல் மூலம் வரும் அகதிகளை நிராகரிக்க ஆஸ்ரேலியா சட்டம் உருவாக்கி, அவ்வாறு வருவோரை Papua தீவுகளில் தங்க வைக்க ஆரம்பித்திருந்தது.
.