சில வெளிநாட்டு மாணவர்களை வெளியேற கூறுகிறது அமெரிக்கா

USHomeland

அமெரிக்காவில் தற்போது F-1, M-1 வகை மாணவ விசாக்கள் மூலம் பல்கலைக்கழகங்கள் போன்ற உயர்கல்வி நிலையங்களில் கல்வி கற்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு அமெரிக்காவின் Immigration and Customs Enforcement (ICE) ஜூலை 6 ஆம் திகதி எச்சரிக்கை விடுத்துள்ளது.
.
F-1, M-1 விசா முறைமைப்படி மேற்படி மாணவர்கள் தமது கல்வி நிலையங்களுக்கு நேரடியா சென்று (in-person) கற்க வேண்டும். அதாவது அவர்கள் வகுப்பறை செல்லாது வீடுகளில் இருந்து online சேவைகள் மூலம் கற்க முடியாது.
.
ஆனால் கரோனா காரணமாக அமெரிக்காவின் பல கல்வி நிலையங்கள் online மூலமாக வகுப்புக்களை தொடருகின்றன. அதனால் மேற்படி மாணவர்கள் வகுப்புகளுக்கு செல்லவேண்டிய தேவை இல்லை. அதேவேளை  F-1, M-1 விசா மாணவர் இவ்வாறு கற்பது  ICE பார்வையில் தண்டணைக்குரிய குற்றமாகும். இவர்கள் மீது ICE தண்டம் விதிக்க உள்ளதாகவும் தேவைப்படின் இவர்களை நாடுகடத்த உள்ளதாகவும் கூறியுள்ளது.
.
2018-2019 ஆண்டு காலத்தில் F-1, M-1 விசா மூல மாணவர்களிடம் இருந்து அமெரிக்கா சுமார் $45 பில்லியன் அந்நிய செலவாணியை பெற்றுள்ளது. இந்த பணம் அமெரிக்காவில் 458,290 வேலைவாய்ப்பை உருவாக்கி உள்ளது. அதில் சுமார் 33.7% F-1, M-1 விசா மாணவர்கள் சீனாவில் இருந்தும், 18.4% மாணவர்கள் இந்தியாவில் இருந்து செல்கின்றனர்.
.
அத்துடன் வகுப்புகளுக்கு செல்ல தேவையில்லாத நிலையில் உள்ள மாணவர்களுக்கும் புதிதாக F-1, M-1 விசா வழங்கப்படாது.
.