இந்தியாவும், சீனாவும் தமது படைகளை சில எல்லை பகுதிகளில் இருந்து பின்வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. Galwan Valley, Ladakh பகுதிகளில் இருந்தே இருதரப்பும் தமது படைகளை பின்வாங்கின. ஆனாலும் Pangong Tso, Daulat Beg Oldie பகுதிகளில் இருந்து படைகள் பின்வாங்கப்படவில்லை.
.
மே மாதம் 5 ஆம் திகதி முதல் இருதரப்பும் ஆயுதங்கள் இன்று இந்த பகுதிகளில் சண்டையில் ஈடுபட்டு இருந்தன.
.
சில தினங்களுக்கு முன் இந்தியா சிறிய அளவு படைகளை முரண்படும் எல்லைகளுக்கு நகர்த்தி இருந்தது. சீனா இரண்டு தினங்களுக்கு முன் பெரிய அளவு படையை எல்லைக்கு சற்று தொலைவில் நகர்த்தி இருந்தது. படைகள் நகர்ந்தாலும், பேச்சுவார்த்தைகளும் தொடர்ந்தன.
.
இரு தரப்பு மேஜர் ஜெனரல்கள் புதன் கிழமை தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவர். இந்தியாவின் லெப். ஜெனரல் Harinder Singh, சீனாவின் மேஜர் ஜெனரல் Liu Lin ஆகியோர் கடந்த சனிக்கிழமையும் நேரடியாக பேசி இருந்தனர்.
.