சிரியா விசாரணைகளை கைவிட்டார் Del Ponte

DelPonte

2011 ஆம் ஆண்டில் சிரியாவில் யுத்த குற்றங்கள் இடம்பெற்றனவா என்பதை விசாரணை செய்ய ஐ.நா. Del Ponte தலைமையில் ஒரு விசாரணை குழுவை அமைத்து இருந்தது. உண்மையில் அசாத் அரசை கவிழ்க்க அங்கு கிளர்ச்சியை உருவாக்கிய மேற்கு நாடுகள் அசாத் அரசு மீது குற்றம் சுமத்தும் நோக்கிலேயே இந்த விசாரணை ஆரம்பித்திருந்தன. ஆனால் பின்னர் அமெரிக்காவும், ரஷ்யாவும் நேரடியாக களம் இறங்க நிர்பந்திக்கப்பட்டன. அங்கு நிலைமையும் மோசமானது.
.
படிப்படியா இந்த யுத்தமும் அந்நிய அரசுகளால் அவர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட யுத்தம் என்பது தெளிவாகியது. நேர்மையான விசாரணைகள் இடம்பெற்றால் அசாத் அரசு மட்டுமன்றி பெரிய நாடுகளும், அவர்களின் தயவில் இயங்கும் ஆயுத குழுக்களும் குற்றவாளிகளாக காணப்படலாம் என்பது தெளிவாகியது. அதனால் ஐ.நா.வை கட்டுப்படுத்தும் முக்கிய நாடுகள் விசாரணைகளை முடக்க செயல்பட்டன. அதனாலேயே விசனம் கொண்டுள்ளார் Del Ponte.
.
சுவிஸ் நாட்டின் முன்னாள் attorney general ஆக இருந்திருந்த Del Ponte “I am frustrated”, “I give up” என்றுள்ளார்.
.
2013 ஆம் ஆண்டில் Del Ponte வெளியிட்ட கருத்தில் தான் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளின் ஆதரவில் இயங்கும் ஆயுத குழுக்களும் யுத்த குற்றத்தில் ஈடுபட்டு உள்ளதாக கருதுவதாக கூறியிருந்தார். இதை அமெரிக்காவோ, ஐரோப்பாவோ விரும்பியிருக்கவில்லை.
.
Yugoslavia, Rwanda ஆகிய நாடுகளில் இடம்பெற்ற கொடுமைகளிலும் அதிகம் கொடுமை சிரியாவில் இடம்பெற்று உள்ளது என்று கூறிய Del Ponte ஐ.நாவின் பாதுகாப்பு சபை விசாரணைகளுக்கு முட்டுக்கட்டையாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.
.
“At first there was good and bad: the opposition on the side of good and the government in the bad role.” என்றும் இன்று “everyone in Syria is on the bad side” என்றும் அவர் கூறியுள்ளார்.
.