அந்நியர்களால் ஆரம்பிக்கப்பட்டு 70,000 அதிகமான உயிர்களை பலிகொண்ட சிரியா யுத்தம் இப்போ ஒருபடி மேலே போகிறது. அண்மையில் சிரியாவுக்கு S-300 என்ற ஏவுகணைகளை ரஷ்யா வழங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த விடயம் சம்பந்தமான கேள்வி ஒன்றுக்கு பதில் கூறிய அமெரிக்காவின் செயலாளர் John Kerry இந்த விற்பனை இஸ்ரவேலின் பாதுகாப்புக்கு ஆபத்தானது என்றுள்ளார்.
அதேவேளை சிரியாவில் கிளர்ச்சி புரிவோருக்கு U$ 100 மில்லியன் மேலதிக உதவிகளையும் அமெரிக்கா செய்யவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்த யுத்தத்தை மேற்கு ஆரம்பித்ததே இஸ்ரவேலுக்கு எதிரான சிரியாவையும் ஈரானையும் அடக்கி ஆள்வதற்கே. ஆனால் ரஷ்யாவின் புதிய நடவடிக்கை நிலைமையை மேலும் குழப்பலாம்.
இந்த வகை S-300 ஏவுகணைகள் சுமார் 200 கம் வரை சென்று தாக்கக்கூடிய, வாகனத்தில் பொருத்திய நிலத்தில் இருந்து வானத்துக்கான ஏவுகணை ஆகும். இது இஸ்ரவேல் மற்றும் அமெரிக்க யுத்த விமானக்களை தாக்கக்கூடியன.