சிரியாவில் ரஷ்ய தாக்குதல் மீண்டும் ஆரம்பம்

Syria

சிரியாவின் Idlib பகுதியில் ரஷ்யா, 22 நாட்களின் ஓய்வின் பின்னர், மீண்டும் விமான தாக்குதல்களை இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பித்துள்ளது. அமெரிக்காவின் கடுமையான எதிர்ப்பின் மத்தியிலேயே ரஷ்யா இந்த தாக்குதலை மீண்டும் ஆரம்பித்துள்ளது. இந்த பகுதியிலேயே  தப்பியுள்ள அரச எதிர்ப்பு குழுக்கள் நிலை கொண்டுள்ளன. இதுவே அவர்களின் இறுதி தளம்.
.
எதிர்ப்பு குழுக்களின் தகவல்படி இன்று 16 இடங்களில், குறைந்தது 30 குண்டுகளை ரஷ்ய யுத்த விமானங்கள் வீசியுள்ளன.
.
சிரியாவின் அரச படைகள் Idlib மீது தங்கினால் தாம் தலையிட உள்ளதாக அமெரிக்கா கூறியுள்ள நிலையில் ரஷ்யா, ஈரான் ஆகிய இரண்டு நாடுகளும் கூடவே சிரியாவுடன் இணைந்து தாக்குதலை செய்யவுள்ளன. ரஷ்யா தனது யுத்த கப்பல்கள் பலவற்றை இப்பகுதிக்கு ஏற்கனவே நகர்த்தியும் உள்ளது.
.
அதேவேளை துருக்கியும் தனது படைகளை Idlib எல்லையோரம் நகர்த்தி உள்ளது. யுத்தம் உக்கிரம் அடையும்போது அகதிகள் இந்த எல்லைப்பகுதியாலேயே துருகியுள் நுழைவர். அத்துடன் சில ஆயுத குழுக்கள் துருக்கியின் ஆதரவு கொண்டவை.
.