சிரியாவிலிந்து படையை திருப்பி அழைக்கிறார் பூட்டின்

Syria

சிரியாவில் நிலைகொண்டு அசாத் அரசுக்கு ஆதரவாக போரிட்ட ரஷ்ய இராணுவத்தை திருப்பி ரஷ்யாவின் ஜனாதிபதி பூட்டின். இன்று திங்கள் வெளிடப்பட்ட இந்த அறிவிப்பை அசாத்துக்கு எதிரான மேற்கு நாடுகள் எதிர்பார்த்து இருக்கவில்லை. பூட்டினின் இந்த நகர்வில் சந்தேகம் கொண்ட மேற்கு இந்த நகர்வின் காரணம் உள்நோக்கம் காண முனைகிறது.
.
பூட்டின் தனது அறிவிப்பில் தாம் சென்ற வேலை எதிர்பார்த்தவாறு முடிந்துள்ளதால் இவ்வாறு தம் இராணுவத்தை திருப்பி அழைப்பதாக கூறியுள்ளார். ஆனாலும் சிறுதொகை ரஷ்ய விமானப்படை தொடர்ந்தும் சிரியாவில் நிலைகொண்டு சமாதானத்தை கண்காணிக்கும் என்றும் பூட்டின் கூறியுள்ளார்.
.
மேற்கின் உதவியுடன் போரிட்ட கிளர்ச்சியாளர் முதலில் பாரிய வெற்றிகளை அடைந்திருந்தாலும் ரஷ்யாவின் வருகையின் பின், ஐந்து மாதங்களுள், அசாத் அரசின் இராணுவம் பல இடங்களை மீளக்கைப்பற்றி இருந்தது.
.

பெப்ருவரி 17 முதல் நடைமுறை செய்யப்பட்டிருந்த யுத்த நிறுத்தம் தற்போது கணிசமான அளவில் கடைப்பிடிக்கப்படுகிறது. அத்துடன் சமாதனத்துக்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெறுகின்றன.
.